மருத்துவர் அனுரத்னா உண்மை சன்பவத்தை முன்வைத்து வண்ணத்துப் பூச்சி என்ற சிறுகதையாக எழுதியதன் மூலமாக மூடநம்பிக்கைக்கு எதிராகவும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதன் அவசியம் குறித்தும் தெளிவுப்படுத்தி எழுதியுள்ளார். இதில் வரும் கதாபாத்திரம் பிரதீபா என்ற பெண்ணை போல் பலர் அறிவியலும் நவீன மருத்துவமும் இன்னமும் செல்லாத இடங்களில் வசிக்கிறார்கள் அவர்களையெல்லாம் கண்டைந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நம்மை போன்ற அமைப்புகளுக்கும் உண்டு.இச்சிறுகதையை வாசித்துவிட்டு பலரிடம் கொண்டு செல்ல வேண்டும் இன்னும் பல பிரதீபாக்களை காக்க வேண்டும். இப்புத்தகத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

Reviews
There are no reviews yet.