அரை நிமிடத்தில் அறிவியல்

₹320.00
Category:

முனைவர் நடராஜன் ஸ்ரீதர் பிரபஞ்சவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பியலை ஆய்வு செய்து வரும் ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார். இந்த புலத்தில் பல ஆய்வுக்கட்டுரைகள் மற்றும்பொது அறிவியல் கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். மேலும் தமிழிலும் அவர் அறிவியல் கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் அவர் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் அவர் தனது ஆராய்ச்சி பற்றிய புதிய தகவல்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்கிறார். அறிவியலை ஆழமாக நேசிக்கும் ஆர்வலர்களுக்கும். எளிய முறையில் புரிந்துகொள்ள விரும்பும் பொது வாசகர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டி சிக்கலான அறிவியல் கருத்துக்களை அரைநிமிடத்தில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாகவும், தெளிவாகவும். சுவாரஸ்யமாகவும் வழங்குகிறது. டைனோசர்கள் பூமியில் இருந்து மறைந்தது ஏன்? பந்துமுனைப் பேனா எப்படி வேலை செய்கிறது? பெட்ரோல் எப்படி தயாரிக்கப்படுகிறது? பிளாஸ்டிக் ஏன் மட்குவதில்லை? விண்வெளியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன? இப்படி அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் அறிவியல் கேள்விகள் முதல். தொழில்நுட்பம் மற்றும் வானியல் அதிசயங்கள் வரை. பலதரப்பட்ட தலைப்புகளில் அறிவியல் உண்மைகளை எளிய கேள்வி-பதில் வடிவில் தருகிறது இந்த புத்தகம். ஒவ்வொரு பதிலும் அரை நிமிடத்தில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால். நேரம் குறைவாக உள்ளவர்களும் அறிவியலை எளிதாக அணுக முடியும். அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும், அறிவியல் சிந்தனையை வளர்க்கும் இந்த புத்தகம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள். மற்றும் அறிவியல் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம். அறிவியலை சுருக்கமாகவும், தெளிவாகவும், சுவையாகவும் கற்க விரும்புகிறீர்களா? அரைந் டத்தில் அறிவியல் புத்தகத்தை உடனே படியுங்கள்! அறிவியல் உலகிற்குள் ஒரு அற்புதமான பயணத்தை தொடங்குங்கள்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “அரை நிமிடத்தில் அறிவியல்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0