மாணவர்களிடையே  அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழில் ”துளிர்” இதழையும் ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் இதழையும் நடத்தி வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வையும் நடத்திவருகிறது.  

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாகவும் பயிற்சி பெறும் வகையிலும் நடைபெற்று வரும் இத்தேர்வில் மாநிலம் முழுதும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள். 6முதல்12 வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெறுகிறது. 

4,5 வகுப்பு பயிலும் துவக்க நிலை மாணவர்களுக்கும் இப்பொழுது இத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

  • வினாத்தாள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.
  • நான்கு விடைகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் 100 வினாக்கள் இருக்கும்.
  • துவக்க நிலை மாணவர்களுக்கு 50 கேள்விகள் இருக்கும்.
  • கேள்விகள் பின்வரும் பகுதிகளில் இருந்து கேட்கப்படலாம் (புதிர்  கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், படமும் செய்தியும், சொற்சுருக்கம்)

தேர்வு முறை மாணவர்களுக்கு மிகுந்த பயன்தரும் முறையில் அமைந்திருக்கும்.

  • புதுமையாகவும் மாறுபட்ட வடிவங்களிலும் கேள்விகள் அமைந்திருக்கும்.
  • மாணவர்களை மதிப்பிடும் முறை அல்லாமல் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முறையில் தேர்வு அமையும்.
  • பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களை அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
  • விடைத்தாள் ’OMR’ முறையில் சரியான விடைக்குரிய வட்டத்தை பென்சிலால் நிரப்பும் வண்ணம் இருக்கும்.
  • துளிர் திறனறிதல் தேர்வு தவிர்க்க இயலா காரணங்களால் தேர்வு தேதி மாற்றியமைக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 21 அன்று துளிர் திறனறிதல் தேர்வு நடைபெறும்.
  • ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு ஆன் லைன் தேர்வு  21.02.2024 காலை 10.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும். மின் அஞ்சல் முகவரிக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வரும். பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்கிறோம். 

தொடர்புகளுக்கு 

ஸ்டீபன்நாதன் 9486766565

பாலகிருஷ்ணன் 7904041791

தியாகராஜன் 9488054683

நாராயணசாமி 9944052435