மரணத்தின் வியாபாரி மனித மனங்களில் இடம் பிடித்த கதை

₹60.00
Categories: ,
1888 ஆம் ஆண்டில், அவரது சகோதரர் லுட்விக் நோபல் மரணம் அடைந்தார். ஆல்ஃபிரட் நோபல் தான் மரணம் அடைந்துவிட்டார் என தவறாகக் கருதிய ஒரு பிரஞ்சு நாளிதழ், அவருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டது. இரங்கல் செய்தியின் தலைப்பு ஆல்ஃபிரட் நோபெலை நிலைகுலையச் செய்தது. “மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார்” (Le marchand de la mort est mort) என்று அந்த இரங்கல் செய்தித் தலைப்பிட்டிருந்தது. அப்போது அவருக்கு வெறும் 55 வயது தான்; 355 காப்புரிமைகளை வைத்திருந்தார். வெறும் எளிய இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி செய்து வந்த போஃபர்ஸ் நிறுவனத்தை, ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமாக மாற்றியது அவர்தான்.
தன்னை “மரணத்தின் வியாபாரி” என்று வர்ணிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். முதலில் மூக்குக்கு மேலே கோபம் தலைக்கு ஏறினாலும், பின்னர் பொறுமையாக அந்தக் கட்டுரையை வாசித்த அவருக்கு, தன்னை ஏன் “மரணத்தின் வியாபாரி” என்கிறார்கள் என்பது விளங்கியது. தான் தயாரித்த வெடிமருந்து, ஆயுதங்கள் உலகெங்கும் அழிவையும் இறப்புக்களையும் ஏற்படுத்துகின்றன என விளங்கிக்கொண்டார்.
-த.வி.வெங்கடேஸ்வரன்
மரணத்தின் வியாபாரி மனித மனங்களில் இடம்பிடித்த கதை என்ற புத்தகம் உலக புத்தக தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் வெளியீடு சார்பாக வெளியிடப்படுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மரணத்தின் வியாபாரி மனித மனங்களில் இடம் பிடித்த கதை”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0