வானத்தைப் பார்த்து வியந்த மனிதன், ஒருநாள் நிலவுக்கே சென்று காலடி பதிப்பான் என்று யாராவது கற்பனை செய்திருப்பார்களா? நிலவைப் பற்றிய கவிதைகளும் கதைகளும் மனிதனின் கற்பனையை விரிவுபடுத்திய நிலையில், அறிவியல் வளர்ச்சி அந்தக் கற்பனையைச் சாத்தியமாக்கியது. நிலவின் தோற்றம், அதன் இயல்புகள், விண்வெளிப் பயணங்கள் என மனிதனின் அறிவியல் தேடல் இன்று பல புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது.
இந்த அறிவியல் பயணத்தையும், விண்வெளி ஆய்வின் வியப்புகளையும் எளிய தமிழில் அறிமுகப்படுத்துகிறது ஏற்காடு இளங்கோ எழுதியுள்ள ‘நிலாப் பெண் கிறிஸ்டினா கோச்’ நூல்.
விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்சின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதாகும். அவரது கல்வி, ஆராய்ச்சிப் பணிகள், நாசா விண்வெளி வீரர் தேர்வு, விண்வெளி நிலையத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள், விண்வெளி நடைப்பயணங்கள், நீண்டகால விண்வெளி வாழ்க்கை ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பெண்களின் பங்களிப்பையும் சாதனைகளையும் இந்நூல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.
இந்நூலை சிறப்பாக எழுதிய ஏற்காடு இளங்கோ அவர்களுக்கு வாழ்த்துகள்…

Reviews
There are no reviews yet.