உடலின் முக்கியமான உறுப்பான தோல் மீதான தவறான கருத்துகள் எண்ணங்கள் காலம்காலமாக நிலவி வருவதோடு அது தொடர்ந்து நீடிக்கவும் செய்கிறது. இதற்கு தோல் அதன் நிறம் இந்த அடிப்படையிலான பாகுபாடுகள் கொடுக்கும் பலன்களே முக்கியகாரணம். வெள்ளை நிறத்தவருக்கு அதிகாரத்தையும் கருப்பு நிறத்தவரை ஒடுக்குவதற்கான காரணத்தையும் இந்த தோல் நிறம் கொடுக்கிறது.
வெள்ளையாய் இருப்பதுதான் அழகு என்ற சிந்தனை வெறுமனே சிந்தனையல்ல அது மிகப்பெரிய வணிகம். இன்று விற்பனையாகும் பவுடர், கீரிம்கள் அனைத்தும் கருப்பான மக்களிடம் வணிகம் செய்து லாபம் பார்க்க திட்டமிட்டு இந்த சிந்தனை உருவாக்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பவுடர், கிரீம்களுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி அளவில் ஆண்டு தோறும் வியாபாரம் நடைபெறுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல வருமானம் கொண்டவர்கள் தோலையும் நிறத்தையும் பராமரிக்க ஆயிரக்கணக்கில் செலவு செய்வதும்
கருப்பாக இருப்பவர்கள் குற்ற உணர்வுக்கு உள்ளாவதையும் நாம் காணலாம்.
சமூகத்தில் பாகுபாட்டை உருவாக்கும் இந்த கருத்தாக்கங்களை எப்படி மாற்றியமைப்பது..?
மாற்றியமைக்கலாம், தோல்-நிறம் பற்றி அறிவியல் அடிப்படையில் புரிந்துகொள்வதன் மூலம் இது சாத்தியமாகும் அதற்கு இந்த புத்தகம் பயன்படும்.
புற ஊதாக்கதிர்கள் செல்களை தாக்காமல் நமது செல்களில் உள்ள DNAவை பாதுக்காக்க கருப்பு நிற தோல் எந்த அளவிற்கு உதவுகிறது என்பதையும் அறிவியல் அடிப்படையில் வெள்ளை நிறத்தோலில் உள்ள குறைபாட்டையும் இந்த புத்தகம் விளக்குகிறது.
மெலினின் வகைகள் அதன் நன்மைகள் மரபணுவின் தாக்கங்கள், போலிக் அமிலம் பற்றிய தகவல்கள் என விரிவாக தோல் நிறம் சமூக கண்ணோட்டம் மற்றும் அதிகாரம் போன்றவற்றை இப்புத்தகம் விவாதிக்கிறது.
அறிவியல் இயக்கத்தின் முக்கிய நோக்கமே தவறான கருத்துகளை நம்பிக்கைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து சரியானதை சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவது தான் அதை இந்த புத்தகம் மூலமும் செய்திருக்கிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க தென் சென்னை மாவட்டக்குழு முன்னெடுக்கும் மக்கள் அறிவியல் தொடர் சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்று பேசிய டாக்டர் மோனிஷா மதுமிதா அவர்களின் ஆங்கில சொற்பொழிவின் தமிழாக்கம் தான் இந்த புத்தகம், இதை திரு.எஸ்.விஜயன் மொழிப்பெயர்த்திருக்கிறார்.
அறிவியல் வெளியீடு வெளியிட்டுள்ளது.
வாசிக்கவும் நண்பர்களே

Reviews
There are no reviews yet.