தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”
மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் ஊறுவது போல, நூல்களைப் படிக்கப் படிக்க மனிதனுக்கு அறிவு வளரும் என்ற வள்ளுவன் சொல்லிற்கிணங்க நமது முதல்நூல் எழுத்தாளர் திருமிகு அமுதன் தேவேந்திரன் ஒரு வாசிப்பாளராக தன்னை தகவமைத்துக்கொண்டு, அதிலும் ரஷ்ய இலக்கியப் படைப்புகளை விரும்பி படித்ததின் விளைவாக அவர் இன்று குழந்தைகளுக்கென்றே நூல்களை படைக்க புறப்பட்டுள்ளார்.
அவர்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பை நான் கிடைக்கப் பெற்றேன்.
அவ்வகையிலே, இவரது முதல் நூல் படைப்பாகிய “கனவைக் காத்த மனிதர்” என்ற நூல் வாசகர்களுக்கு ஒரு புதிய பார்வையும் புத்துணர்வையும் வழங்குமென நம்புகிறேன்.குழந்தைகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் நமது ஆசிரிய பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் குழந்தை உளவியலாளர்களுக்கும் இந்நூல் பயனளிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்போடு நூலாசிரியருக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

Reviews
There are no reviews yet.