அறிவியல் என்பது கேள்வி கேட்பதிலிருந்தும், பழைய கருத்துகளை புதிய ஆதாரங்களின் வெளிச்சத்தில் மறுபரிசீலனை செய்வதிலிருந்தும் வளர்கிறது. அந்த வகையில், தமிழ் மரபையும் நவீன அறிவியலையும் உரையாடச் செய்யும் முயற்சியாக இந்நூலைக் கருதலாம்.
பழந்தமிழரின் இயற்கை அறிவைப் பற்றிய பெருமிதத்தை மட்டும் வெளிப்படுத்தாமல், அவற்றை ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்நூல் ஏற்படுத்துகிறது. தமிழ், வரலாறு, உயிரியல், தாவரவியல், விலங்கியல், பரிணாமவியல் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுவாசகர்களுக்கு இந்நூல் புதிய சிந்தனைக் கேள்விகளை எழுப்பும் என நம்புகிறோம்.
தமிழ் அறிவு மரபை அறிவியல் பார்வையில் மீண்டும் வாசிப்போம்;
கேள்விகளோடும் சான்றுகளோடும் தொடர்ந்து ஆராய்வோம்.

Reviews
There are no reviews yet.