உயிரினங்கள் பூமியின் எல்லாப் பகுதியிலும் பரவியுள்ளன. மலைகளின் உச்சியில் இருந்து, கடலின் ஆழம் வரை இருக்கின்றன. எந்த இடத்திலும் வாழ்வதற்கான ஆற்றலை உயிரினங்கள் பெற்றுள்ளன. ஆனால் பல்வேறு உயிரினங்கள் வாழும் பகுதியாக வெப்பம் மண்டல மழைக்காடுகள்தான் இருக்கின்றன.
இதற்கு முதல் காரணம் பரப்பளவு. நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது புத்தகத்தில் காணப்படும் பூமியின் வரைபடத்தை எடுத்துப் பார்த்தால் வெப்பமண்டலப் பகுதிகள் மிக குறைந்த பரப்பளவையே கொண்டிருப்பதுபோல தோன்றும். ஆனால் இது ஒரு மாயை. கோள வடிவில் நம் பூமியை ஆராயும்போது கிட்டத்தட்ட 40 சதவிகிதப் பகுதி வெப்ப மண்டலப் பகுதியாகத்தான் இருக்கின்றன. இத்தகைய பெரிய பரப்பளவில் அதிக உயிரினங்கள் வாழ்வது இயற்கைதான் இல்லையா? ஆனால் அதுமட்டும் காரணமல்ல.
வேறு என்ன காரணமாக இருக்கும் புத்தகத்தை முழுமையாக வாசிக்ககவும்…
கிழக்கு பதிப்பகத்தின் துணை ஆசிரியர் நன்மாறன் திருநாவுக்கரசு எழுதிய இயற்கையின் கண்ணாமூச்சி ஆட்டம் என்ற புத்தகம் உலக புத்தகத்தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் வெளியீடு சார்பாக வெளியிடப்படுகிறது.

Reviews
There are no reviews yet.