அறிவியலின் குழந்தைகள் என்ற புத்தகம் கிராமத்தில் நடைபெறும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு சிறுகதை. மூடநம்பிக்கைகள் நிறைந்த பகுதியில் அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் சிந்தித்து ஒரு ஆபத்தை தடுப்பதுதான் கதை. அது என்னவிதமான மூடநம்பிக்கை..? என்ன மாதிரியான ஆபத்து நேரிட்டது..? குழந்தைகள் எங்கிருந்து இந்த அறிவியல் பார்வையை பெற்றார்கள்..? என்பதை இந்த புத்தகத்தை வாசித்து அறிந்துகொள்ளுங்கள். மிக சிறப்பான எழுத்து நடையில் ஆயிஷா நடராசன் சுவாரஸ்யமாக இதை எழுதியிருக்கிறார். குறைந்த பக்கங்கள் குறைந்த விலை ஆனாலும் தரமான பலவண்ணத்தில்(Multicolour) வடிவமைப்பை கொண்டது. இது பரவலாக கொண்டு செல்ல வேண்டிய புத்தகம்.
Reviews
There are no reviews yet.