மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழில் ”துளிர்” இதழையும் ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் இதழையும் நடத்தி வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வையும் நடத்திவருகிறது.
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாகவும் பயிற்சி பெறும் வகையிலும் நடைபெற்று வரும் இத்தேர்வில் மாநிலம் முழுதும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள். 6முதல்12 வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெறுகிறது.
4,5 வகுப்பு பயிலும் துவக்க நிலை மாணவர்களுக்கும் இப்பொழுது இத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.